Wednesday, 25 January 2012

தேவதையின் ரசிகன்…(1)




 என் கிறுக்கல்களை
கவிதைகள் என்கிறாய்
ஒப்புக்கொள்கிறேன்..
கவிதையின் காதலனும்
கவிஞன் தானே…
 -------------------------------
உன் வீட்டினுள்
புதையல் இருப்பதன் தடயம்,
வாசலில் உன் காலணிகள்…
 -----------------------------
 பூமியின் பகைவன்
உன் காலணிகள்..
உன்னை தொட விடுவதில்லையாம்….
  --------------------------------
எல்லா தேவதைகளுக்கும்
அமிழ்தம்தான் உணவு..
நீ மட்டும் தான்
உணவை அமிழ்தாக்குகிறாய்…



Images:Google

No comments:

Post a Comment